Monday, November 18, 2024
HomeLatest Newsநம்பிக்கையில்லா பிரேரணையுடன் களமிறங்கும் சஜித்;பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்

நம்பிக்கையில்லா பிரேரணையுடன் களமிறங்கும் சஜித்;பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மறுபுறம் பாராளுமன்றல் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றவியல் பிரேரணையும் நேற்றையதினம் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடுகின்றது.

இந்நிலையில் காலை10 மணி முதல் 11மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்கள் கேட்கப்படவுள்ளது.

அத்துடன் காலை 11மணிமுதல் 5.30மணி வரை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நிதி அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் கூற்று பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை வெகு விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் இதற்கு தேவையான அழுத்தங்களை மக்கள் பிரயோகிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இன்றைய அமர்வில் அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணைகள் தொடர்பில் சபையில் பிரஸ்தாபிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Recent News