விபத்து இடம்பெற்ற வழித்தடத்தில் கவாச் என்ற ரயில் பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் இந்திய தொழில்நுட்பத்தில் கவாச் என்ற கருவியை உருவாக்கியுள்ளனர்.
குறித்த பாதுகாப்பு கருவியான கவாச் விபத்துக்களை தடுப்பதற்காக ரயிலின் முன்பக்கம் பொருத்தப்படுகின்றது.
இந்த கருவி, ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ரயில் வருவதை அல்லது தண்டவாளத்தில் இடையூறு இருப்பதை உணர்ந்தாலோ சுமார் 380 மீட்டருக்கு முன்னதாகவே தன்னிச்சையாக செயற்பட்டு என்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நிலையில் சில வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆயினும் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநில வழித்தடத்தில் இந்த கவாச் கருவி செயற்பாட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.