Thursday, January 23, 2025
HomeLatest Newsபட்டர் சிக்கன் குறித்து ருவிட்..! எலான் மஸ்கை வைத்து செய்த நெட்டிசன்கள்..!

பட்டர் சிக்கன் குறித்து ருவிட்..! எலான் மஸ்கை வைத்து செய்த நெட்டிசன்கள்..!

பட்டர் சிக்கன் குறித்து எலான் மஸ்க் செய்துள்ள ‘டுவிட்’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு டுவிட்டரில் சுமார் 14 கோடி பேர் பாலோயர்களாக உள்ளனர். இந்நிலையில், பட்டர் சிக்கன் குறித்து எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

ஆனால் எலான் மஸ்க் பாலோ செய்யும் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த டேனியல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மீம்ஸ்களை பகிர்வது, பிரபலங்களை கிண்டல் செய்வதை தொடர்ந்து செய்து வருகிறார். அதை அவரது பாலோயர்கள் விரும்பி ரீ-டுவிட் செய்வார்கள்.

சமீபத்தில் டேனியல், பட்டர் சிக்கன் நான் உணவை சாப்பிட்டுள்ளார். அது அவருக்கு மிகவும் பிடித்து போகவே தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டர் சிக்கன் நான் படத்தை பகிர்ந்து, நான் இந்திய உணவை மிகவும் விரும்புகின்றேன். அவை உண்மையிலேயே நன்றாக இருக்கின்றது என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவை எலான் மஸ்க் பார்த்துள்ளார். மேலும் டேனியலின் பதிவு உண்மை என்று பதில் அளித்துள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் எலான் மஸ்குக்கு பட்டர் சிக்கன் நான் பிடிக்குமா? என்று டுவிட்டரில் விவாதத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால், ஒரு சில பயனர்கள் எலான் மஸ்க் பட்டர் சிக்கன் சாப்பிடுவது போன்றும், சமைப்பது போன்றும் புகைப்படங்களை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

Recent News