Tuesday, December 24, 2024
HomeLatest Newsரஷ்யாவின் அடுத்த விண்கலம் ; சளைக்காத ரஸ்சியர்கள்.....!

ரஷ்யாவின் அடுத்த விண்கலம் ; சளைக்காத ரஸ்சியர்கள்…..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கிருந்து எரிபொருள், தண்ணீர் போன்றவை அனுப்பப்படுகின்றன.

அந்தவகையில் ரஷியாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புரோக்ரஸ் எம்.எஸ்-24 என்ற விண்கலத்தை அனுப்ப ரஷியா திட்டமிட்டுள்ளது. இதற்காக சோயுஸ்-2.1ஏ ராக்கெட் நாளை மறுநாள் (புதன்கிழமை) பைகோனூர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஏவப்படுகிறது.

இந்த விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுமார் 2,500 கிலோ எடையிலான பொருட்களை சுமந்து செல்கிறது. இதில் விண்வெளி நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு 500 கிலோ எரிபொருள், விண்வெளி வீரர்களுக்கு 420 கிலோ தண்ணீர், உணவு மற்றும் உடைகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.

இதனை விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் பணி வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என ரஷிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recent News