நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்திய சந்திரயான் விண்கலம் சுமார் 100 கி.மீட்டர் உயரத்தில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது.
வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான் 3 தரையிறங்க உள்ளது.
இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி ரஷ்யா நிலவின் ஆராய்ச்சிக்கு விண்ணுக்கு அனுப்பிய லுனா 25 என்ற விண்கலம் வெறும் 5 நாட்களில் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.
அத்தோடு வரும் 21 ஆம் திகதி சந்திரயான் விண்கலத்திற்கு முன்பாக இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.