Thursday, January 23, 2025
HomeLatest Newsதமது விந்தணுக்களை சேமிக்க அலைமோதும் ரஷ்ய வீரர்கள்!

தமது விந்தணுக்களை சேமிக்க அலைமோதும் ரஷ்ய வீரர்கள்!

ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது குறித்து ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ்,

விந்தணுக்களை இலவசமாக சேமித்து கொள்ளும் வசதி
படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்து கொள்ளும் வசதியை வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் மருத்துவ காப்பீட்டிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா, யுக்ரேன் மீதான தனது படையெடுப்பை தொடங்கியது. யுக்ரேன் உடனான போரில் ரஷ்யா தற்போது அடுத்தடுத்த பின்னடைவுகளைத் சந்தித்து வரும் நிலையில் 3 லட்சம் படை வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்த நிலையில் போருக்கு அழைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் தங்களது விந்தணுக்களை பாதுகாக்க கிளினிக்குகளில் அலைமோதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News