Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்..!

அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்..!

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஏவுகணைகள் உட்பட ரேடார் நிலையங்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகள் மற்றும் பல இராணுவ ஆயுதங்களை வழங்கியிருந்தது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணைகளை, ரேடார் மூலம் துல்லியமாக கண்டறிந்து உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recent News