கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததிலிருந்து அதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் துணையுடன், இன்று வரை உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்நிலையில், ரஸ்யா நேற்று நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள 1794-ல் கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயமான டிரான்ஸ்ஃபிகரேஷன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் தேவாலயம் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது.
ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதி என வர்ணிக்கப்பட்ட நகர வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த தேவாலயம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியதும் நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
ரஷியாவின் நட்பு நாடான பெலாரஸின் அதிபரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்திருக்கும் வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவுக்கெதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் தோல்வியை கண்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.