உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்கனவே உள்ள பகை போன்ற காரணிகளால், இரண்டு நாடுகளும் முரண்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இரண்டு நாட்டின் ராணுவ வீரர்களும் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடி உள்ளனர்.
கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகா மாகாணத்தில் துருக்கி எல்லை அருகேயுள்ள அல் கதானியா நகருக்கு அருகே இரண்டு நாட்டின் ராணுவ வீரர்களும் சந்தித்து உள்ளனர்.
இதன்போது இரண்டு பகை நாடுகளின் ராணுவ வீரர்களும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடி இருந்ததோடு, ஞாபகத்திற்காக தமது சீருடையில் இருந்த சிறிய அடையாளங்களை பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. சிரியாவில் அமெரிக்க படைகள், ஐ.எஸ்.ஐ தீவிரவாத குழுக்களை எதிர்த்தும், ரஷ்ய படைகள் அதிபர் ஆசாத்திற்கும் ஆதரவாகவும் ஐ.எஸ்.ஐ தீவிரவாத குழுக்களை எதிர்த்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பலமுறை அதிபர் ஆசாத் படைகளுடன் அமெரிக்க படைகளுக்கு மோதல் ஏற்படாமல் ரஷ்ய படைகள் காப்பாற்றி வந்ததாகவும் பல குறிப்பிடப்பட்டுள்ளன.