Wednesday, January 8, 2025
HomeLatest Newsரஷ்யா, உக்ரேன் நாட்டவர்களின் வீசா காலம் நீடிப்பு!

ரஷ்யா, உக்ரேன் நாட்டவர்களின் வீசா காலம் நீடிப்பு!

ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வீசாவுக்கான கால எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா கால எல்லையை எவ்வித கட்டண அறவீடுகளுமின்றி இரண்டு மாத காலத்துக்கு நீடித்துள்ளதாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கு இடையே யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு இன்னும் நிலைமை சீராகவில்லை.

இந்த நிலையில், இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டவர்கள் தொடந்து இலங்கையில் தங்கியிருக்கக்கூடியவாறு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News