Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsரஷ்யா தொடர்பில் பதிலளிக்க வேண்டும் - பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கருத்து..!

ரஷ்யா தொடர்பில் பதிலளிக்க வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கருத்து..!

ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பியா பதிலளிக்க வேண்டும் என
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.புனித லுசியா பேராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த இரண்டு வருடமாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துவருகின்றது. பல்வேறு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அதனை நிறுத்த ரஷ்யா முன்வரவில்லை. ஆகவே, ஐரோப்பா ஒன்றும் பலவீனமானது அல்ல எனவும் அதற்கு தக்க பதிலளிக்க வேண்டும் எனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் தமது இராணுவத்தினரை அனுப்பப் போவதாக தெரிவித்த கருத்தினை அவர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ரஷ்யா தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக ரஷ்ய-உக்ரைன் போர் நடைபெற்றுவரும் நிலையில்
அமெரிக்க உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News