Saturday, January 25, 2025
HomeLatest Newsமற்றுமொரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா!

மற்றுமொரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா!

உக்ரைன் நிலப் பரப்பில் வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்த ரஷ்யா கடந்த மாதத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த அதிரடி பின்வாங்கல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட சர்வதேச செய்தி ஊடகங்கள் ரஷ்யா மீண்டும் மாபெரும் போருக்குத் தயாராகி வருவதாகவும் தற்போது மனித வள குறைபாட்டினால் மிகவும் தத்தளிப்பதாகவும் இதனால் இராஐதந்திர முறையிலான பின்வாங்கலை ரஷ்யா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவிடம் இன்னமும் வலிமை மிக்க பேராயுதங்கள் இருப்பதாகவும் சக்தி மிக்க ஆயுதங்கள் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரஷ்ய படைகளிடம் இருந்து சுமார் 12,000 ற்கும் மேற்பட்ட சதுர கிலோ மீற்றர் பரப்பளவு நிலத்தை உக்ரைன் படைகள் மீளவும் கைப்பற்றியிருப்பதுடன் பல்லாயிரக்காணக்காண ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் படைகள் மீளவும் கைப்பற்றிய பிரதேசங்களுக்கு விரைவு பயணத்தை மேற்கொண்ட அதிபர் செலன்ஸ்கி போர்க் களத்தில் போராடிய இராணுவ வீரர்களை தனித் தனியாக பாராட்டியதுடன் அவர்களுடன் ‘செல்பி’ புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார் என்பதுடன் அவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் கொடுத்து விட்டு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News