Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் அதிபரை படுகொலை செய்ய ரஷ்யா திட்டம் !!!

உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய ரஷ்யா திட்டம் !!!

போலந்தில் உக்ரைன் அதிபா் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய ரஷிய உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சதித் திட்டம் திட்டியதற்காக போலந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடயமானது, நேற்றையதினம்(19) போலந்து சட்ட நடைமுறையாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், போலந்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்வதற்கு ரஷ்ய உளவுத் துறையின் சதித் திட்டத்தில் பங்கேற்ற ‘பவெல் கே’ என்பவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, அவர் போலந்து நாட்டவர் என்றும் ஜெலன்ஸ்கி வந்துசெல்லும் ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்களை ரஷிய உளவு அமைப்பினரிடம் தெரிவிப்பதற்கு புதன்கிழமை(17) ஆயத்தமாகக்கொண்டிருந்த போது அவா் செய்யப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.மேலும், உக்ரைன் உளவு அமைப்பினருடன் ஒருங்கிணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News