உக்ரைனுக்கு ஆபத்தான கொத்துக் குண்டுகளை வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதால் உக்ரேன் – ரஷ்யாவிடையே பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளு்கிடையிலான யுத்தம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் நிலையி்ல் இரு தரப்புக்களுக்கும் ஏராளமான உயிர்ச் சேதங்களுடன் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் ஆதரவு நிலையிலுள்ளதுடன் ஆயுத உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதனால் கோபமடைந்த ரஷ்யா மேற்கத்தேய நாடுகளுக்கெதிராக பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதக் கிடங்கை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.