ரஷ்யப் படைகளுக்கெதிராக உக்ரைன் தொடர் தாக்குதல்களை நடாத்தி வரும் நிலையில் ரஷ்யாவின் தெற்கு எல்லைப் பகுதியான பிரையான்ஸ்க் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடாத்த முயன்ற 3 டிரோன்களை ரஷ்யா அழித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக உக்ரைனி்ன் கிவ் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ இரண்டுமே வாரத்திற்குப் பலமுறை சில டிரோன்களை விரட்டிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.போரின் முன்னகர்த்தலு்கு எண்ணெய் பிரதானமாகக் காணப்படுவதால் ரஷ்யாவிலுள்ள எண்ணெய் வளம் மி்க இடங்கள் உக்ரேனின் டிான் தாக்குதலில் முன்னுரிமை இலக்குகளாகக் காணப்படுகின்றன.
இதேவேளை கிரிமியா தீபகற்பம் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை மீட்டெடுக்க உக்ரேன் பலமுறை வலியுறுத்தி வரும் நிலையில் குறித்த இடம் தொடர்ச்சியாக டிரோன்கள் மூலம் குறிவக்கப்பட்ட நிலையி்ல் 9 டிரோன்களை வீழ்த்தியதாக குறித்த திபகற்பத்திற்கு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில் கடந்த வாரமும் ரஷ்யாயாவின் தெற்கு நகரான லோரேனெஜ் நகரிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தை ஆளில்லா விமானமொன்று தாக்கியதில் இருவர் காயமடைந்த சம்பவம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.