Friday, January 24, 2025
HomeLatest Newsஉக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையில் கூலிப் படைகளை களமிறக்கிய ரஷ்யா.

உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையில் கூலிப் படைகளை களமிறக்கிய ரஷ்யா.

உக்ரைன் மீது கடந்த ஒரு மாதத்தை தாண்டிய நிலையிலும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துவரும் ரஷ்ய பாதுகாப்பு படையினர் உக்ரைனின் பல நகரங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தினை கைப்பற்றும் முயற்சியில் கடந்த சில வாரங்களாக இறங்கியுள்ளனர்

இந் நிலையில் கீவ் நகரினை கைப்பற்றும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.ரஷ்ய படைகளின் தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக உக்ரைனின் இராணுவப் படையும் கடுமையாக போராடி ரஷ்ய படைகளை முன்னேற விடாது தடுத்து வருகின்றதுடன் பல ரஷ்ய வீரர்களையும் சிறைப்பிடித்தும் வைத்துள்ளது.

மறுபுறம் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இரகசிய முறையில் சுமார் 1000 ற்கும் மேற்பட்ட தனியார் கூலிப் படைகளை களமிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

குறித்த தனியார் கூலிப்படைகள் திடீரென களமிறக்கப்பட்டமை பல்வேறு தரப்பினரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மைய நாட்களாக ரஷ்ய படைகள் கடுமையான உயிரிழப்புக்களை சந்தித்து வருவதுடன் குறிப்பாக பல இராணுவ உயரதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில் ரஷ்யாவின் இராணுவ இழப்பை ஈடுசெய்யும் வகையில் இது அமைந்துள்ளதா அல்லது புதிய திட்டங்களுடன் ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்ளப்போகின்றதா என்பது தொடர்பில் தெரியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News