உக்ரைனுடனான தானிய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல், தங்கள் நாட்டின் வேளாண் பொருள்களையும் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க ஐ.நா.வுக்கு ரஷியா 3 மாதங்கள் கெடு விதித்துள்ளது.
தானிய ஒப்பந்தத்திலிருந்து ஒரு நாடு விலக விரும்பினால் அதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் நிபந்தனை உள்ளது.
அந்த நிபந்தனையின் அடிப்படையில், ரஷிய வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு அனுமதிப்பதற்கான ஒப்பந்த உறுதிமொழியை நிறைவேற்ற ஐ.நா.வுக்கு 3 மாதங்கள் கெடு விதிக்கிறோம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகரோவா கூறியுள்ளார்.