Saturday, January 18, 2025
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்..!

உக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்..!

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா படையெடுப்பு தொடங்கி போர் ஓராண்டையும் கடந்து நீடித்து வருகின்ற நிலையில் இரு நாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு நாடுகளுமே பின்வாங்காமல் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில் உக்ரைனின் ஹோஹோலீவ் கிராமத்தில் எண்ணெய் ஆலை ஒன்றின் மீது ரஷியா திடீரென இன்று ராக்கெட்டுகளை கொண்டு ஏவி தாக்குதல் நடத்தியது.

இதனை உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவரான ஆண்ட்ரி எர்மாக் உறுதிப்படுத்தி உள்ளார்.

நேற்றிரவு குடியிருப்பு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 2 பேர் காயமடைந்தனர் என உக்ரைனிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில், பீரங்கிகள், சிறிய ரக பீரங்கிகள், குண்டுகள், ஆளில்லா விமானம் மற்றும் விமானம் உள்ளிட்டவற்றை கொண்டு 395 குண்டுகளை வீசியுள்ளனர் என உக்ரைனின் தென்பகுதிக்கான ராணுவ நிர்வாகத்தின் தலைவர் அலெக்சாண்டர் புரொகுடின் கூறியுள்ளார்.


குறைந்த உயரத்தில் பறக்க கூடிய 4 ஏவுகணைகளை ரஷியா வீசின. அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர் என அந்நாட்டு ராணுவம் இன்று வெளியிட்ட டெலிகிராம் தகவல் தெரிவிக்கின்றது.

Recent News