ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனில் 12 ட்ரோன்கள் மற்றும் ஒரு கப்பல் ஏவுகணையை ஏவியுள்ளது. உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 10 ட்ரோன்களை தங்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பே அழித்தன என்று உக்ரைனின் விமானப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஏவிய குரூஸ் ஏவுகணை அழிக்கப்படவில்லை என்றாலும் அதன் இலக்கை அடைய முன்னர் தடுக்கப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
அதேபோல், அழிக்கப்படாத இரண்டு ட்ரோன்களும் என்ன ஆனது, அதன் விளைவுகள்
மற்றும் பாதிப்புகள் என்னவென்றும் விமானப்படை கூறவில்லை.
ஆனால், ஈரானில் தயாரிக்கப்பட்ட இந்த ஷாஹெட் ட்ரோன்கள் உக்ரைனின்
வடமேற்கு நோக்கிச் சென்றதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் தெற்கில் உள்ள மைகோலேவ் பகுதியில் இந்த 10 ட்ரோன்கள்
சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.