Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகாசாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது  வீசப்பட்ட ராக்கெட்டுகள்..!

காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது  வீசப்பட்ட ராக்கெட்டுகள்..!

காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேலின் ஸ்டெரோட் நகரை நோக்கி நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கபட்டதோடு இரண்டு நகரத்திற்கு வெளியே தரையிறங்கியது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காசா நகரம் உட்பட காசா பகுதியின் வடக்குப் பகுதிகளிலிருந்து, ஷுஜாயாவின் சில பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் அதன் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை மீண்டும் நிலைநிறுத்தி அதிக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. காசா நகரின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளும் கடுமையான வான்வழித் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், 350 பேர் தங்கள் வீடுகள் மீது நேரடி விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் 450 இலக்குகளை குறிவைத்துள்ளதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த இலக்குகள் குடியிருப்பு வீடுகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


பள்ளிகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், கடைகள் மற்றும் சந்தைகள் போன்ற பொது வசதிகளைத் தவிர, கடந்த வாரம் முதல் இன்று அதிகாலை வரை, காசா பகுதி முழுவதும் அதிகமான குடியிருப்பு வீடுகள் குறிவைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News