Saturday, December 28, 2024
HomeLatest Newsஈராக் பாதுகாப்பு வலயத்தில் ரொக்கெட் தாக்குதல்!

ஈராக் பாதுகாப்பு வலயத்தில் ரொக்கெட் தாக்குதல்!

நேற்றைய தினம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ராக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தலைநகரில் முக்கிய அலுவலகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளது இல்லங்கள் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் வெளிநாட்டு தூதரகங்கள் பல இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. ஈராக்கில் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஆரம்பமாக இருந்த நிலையில் இந்த தாக்குதல் பாராளுமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் கூட்டத்தை கலைக்கும் விதமாக இது மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

கடந்த மாதம் முழுதும் மீண்டும் மீண்டும் ஈரான் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல்கள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு சில நிமிடத்திற்கு முன்பாக ராக்கெட் தாக்குதல் முதல் முறையாக நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் விபத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அறியப்படவில்லை.

Recent News