Thursday, January 23, 2025

முதியோர்களை பராமரிக்க ரோபோ..!நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..!சீனா அசத்தல்..!

முதியோர்களை கவனமாக பராமரித்து கொள்ளும் வகையில் மனித உருவ ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ சீனாவிலே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் , 2035 ஆம் ஆண்டிற்குள் 60 வயதை தாண்டியர்வர்களின் எண்ணிக்கை 28 கோடியிலிருந்து 40 கோடிக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்ட ஃபோரியர் இன்டலிஜென்ஸ் நிறுவனமே இந்த மனித உருவ ரோபோவை வடிவமைத்துள்ளது.

இந்த ரோபோவின் மூலம், மருத்துவ சேவையை வழங்குதல்,நோயாளிகளை படுக்கையில் இருந்து சக்கர நாற்காலிக்கு மாற்றுதல், பொருட்களை எடுத்துக் கொடுத்தல் போன்ற பணிகளை செய்யும் வகையிலான ரோபோவே தமது குறிக்கோள் என்று ஃபோரியர் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென் கோ தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, தற்சமயம் ஆராய்ச்சி நிலையிலுள்ள இந்த ரோபோ அடுத்த 3 ஆண்டுகளிற்குள் உபயோகத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Videos