Wednesday, December 25, 2024
HomeLatest Newsகதறி அழுத ராபர்ட் மாஸ்டர்;கோபத்தில் எழுந்து போன ரச்சிதா...வெளியானது ப்ரோமோ

கதறி அழுத ராபர்ட் மாஸ்டர்;கோபத்தில் எழுந்து போன ரச்சிதா…வெளியானது ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு நகருகின்றது.அந்தவகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக அச்சு அசல் மாறி உள்ளது.

இதில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அரசராக ராபர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

தற்போது டாஸ்க் நிறைவு பெற்ற நிலையில், பிக்பாஸ் தான் கொடுத்திருந்த ரகசிய டாஸ்க்கினை சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த ராபர்ட் மாஸ்டர் ராணியாக தன்னுடன் இருந்த ரச்சிதாவின் ஏமாற்றத்தினை தாங்க முடியாமல் கண்கலங்கி அழுதுள்ளார்.

இதோ அந்த ப்ரமோ..

Recent News