Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅவுஸ்திரேலிய அடிலெய்டில் பௌத்த விகாரையில் திருட்டு!தொடர்ந்து கைவரிசை காட்டும் நபர்..!

அவுஸ்திரேலிய அடிலெய்டில் பௌத்த விகாரையில் திருட்டு!தொடர்ந்து கைவரிசை காட்டும் நபர்..!

அவுஸ்திரேலிய அடிலெய்டில் இலங்கையின் பௌத்த விகாரையில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விகாரைக்குள் பிரவேசித்த ஒருவர் வழிபாட்டாளர்கள் வழங்கிய பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இந்த திருட்டு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது.

திருட வந்த நபர் 3000 அவுஸ்திரேலியா டொலர்களை திருடிச் சென்றுள்ளமை சீசீடிவி கமராவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் இதற்கு முன்னதாகவே தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மற்றொரு விகாரையில் சமீபத்தில் பணத்தை திருடியவர் என்றும் தெரியவந்துள்ளது.

அத்தோடு, தெற்கு அவுஸ்திரேலியா விகாரையில் இருந்து அவர் 800 டொலர்களை திருடிச் சென்றதாக முறையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News