Monday, December 23, 2024
HomeLatest Newsஅதிகரிக்கும் பலி-சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.

அதிகரிக்கும் பலி-சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.

வடமேற்கு சீனாவின் கன்சு குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானதோடு தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் பலி எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளதாகவும் 980 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

அத்தோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது
இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 127 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதற்கிடையே நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு உதவ தைவான் முன்வந்துள்ளது தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது வலைத்தள பக்கத்தில் கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

Recent News