Friday, November 15, 2024
HomeLatest Newsராஜபக்சர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் சீற்றம்!

ராஜபக்சர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் சீற்றம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்களின் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது.

மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்ந்ததையடுத்து சமூக ஊடகங்களில் ராஜபக்சர்களுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது.

சமூக ஊடக பயனர்கள், பல முக்கிய பிரமுகர்கள் உட்பட, தற்போதைய விவகாரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் ராஜபக்ச நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையில், அரசாங்கத்திற்கு எதிராக ‘வெள்ளை துணி’ பிரச்சாரம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பொது ஆர்ப்பாட்டங்களும் தொடரவுள்ளன.

நெலும் பொக்குண திரையரங்கிற்கு வெளியே வெள்ளைத் துணி பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுவதால், வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடிகளில் வெள்ளைத் துணி கட்டப்பட்டிருக்கும்.

நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பிரசாரம் எதிர்வரும் வாரத்தில் அதிகளவான வாகன ஓட்டிகள் பக்கவாட்டுக் கண்ணாடியில் வெள்ளைத் துணியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சங்கிலித் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்து வருகிறது. புதன்கிழமை இரவு வாகன சாரதிகள் ராஜபக்ச நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் வாகனத்தின் ஒலிகளை ஒலிக்கச் செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், சில வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அவற்றின் ஜெனரேட்டர்களை இயக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் அப் பகுதிகள் நேற்று முழு இருளில் மூழ்கின.

கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தக நிலையமான லிபர்ட்டி பிளாசாவில் நேற்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு டீசல் இல்லை என கடை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. லிபர்ட்டி பிளாசாவில் உள்ள கடை உரிமையாளர்கள் இது தொடர்பில் கூறுகையில், மின்சார நெருக்கடியின் விளைவாக தங்கள் வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

Recent News