பிரதமருக்கான சொகுசு பங்களாவை வேண்டாம் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மாறாக, நிதியமைச்சராக பொறுப்புவகித்த காலகட்டத்தில் வசித்துவந்த இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் தற்போது குடியேற இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த, இல்லத்தை, ஏற்கனவே தமது சொந்த பணத்தில் ரிஷி சுனக் மீண்டும் புதுப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக பிரித்தானிய பிரதமர்கள் நான்கு படுக்கையறை கொண்ட உத்தியோகபூர்வ சொகுசு பங்களாவில் குடியேறுவதே வழக்கம். இந்த நிலையில், பிரதமரும், மனைவி அக்ஷதா மூர்த்தியும் தங்களது முன்னாள் குடியிருப்புக்கே திரும்புவார்கள் என்று பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இரண்டு படுக்கையறை கொண்ட இல்லமானது அவர்களுக்கு போதுமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக் தம்பதிக்கு, 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நான்கு சொகுசு வீடுகள் உள்ளன. அத்துடன், Kirby Sigston கிராமத்தில் ஜார்ஜியன் மேனர் வீடு ஒன்றும் இவர்களுக்கு உள்ளது. இங்கேயே வார இறுதியில் ரிஷி சுனக் குடும்பம் தங்கி வருகிறது. பொதுவாக இலக்கம் 10 என்பது பிரித்தானிய பிரதமர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லம்.
1997ல் இருந்தே பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பமானது குடியிருக்க பயன்படுத்தப்படும். ஆனால், இலக்கம் 11 குடியிருப்பானது நிதியமைச்சருக்காக ஒதுக்கப்படும்.
இரண்டு படுக்கயறை கொண்ட இல்லம் இது. ஒவ்வொரு ஆண்டும், பிரதமரின் இல்லத்தை மெருகூட்ட 30,000 பவுண்டுகள் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படும். ஆனால் பிரதமர் ஜோன்சன் இந்த தொகையைவிட அதிகமாக செலவிட்டு, ஒவ்வொருமுறையும் சிக்கலை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.