பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய அரசியலில் ஆட்சித்தரப்பில் கடந்த சில நாட்களாக நிலவிய குழப்பங்களின் வரிசையில் ஏழுவாரத்தில் இரண்டாவது பிரதமராக இன்று முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப்போட்டியில் களமிறங்க திட்டமிட்ட முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்று இந்த களத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் எஞ்சிய போட்டியாளராக கருதப்பட்ட பென்னி மோர்டனும் இறுதிநேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் ரிஷி சுனாக் போட்டியின்றி கட்சித்தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக இன்று பிற்பகல் இரண்டுமணியளவில் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசியலில் முதற்தடைவையாக ஆசியப் பூர்வீகத்தைகொண்ட பிரதமராகவும் வயது குறைந்த பிரதமாராகவும் ரிஷி சுனாக் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..