Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsஉக்ரைன் அதிபருக்கு இந்திய இனிப்புகளை கொடுத்த ரிஷி சுனக்...!

உக்ரைன் அதிபருக்கு இந்திய இனிப்புகளை கொடுத்த ரிஷி சுனக்…!

உக்ரைன் அதிபருக்கு , இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் இந்திய இனிப்புக்களை வழங்கியமை தற்பொழுது வைரலாகி வருகின்றது.

இந்திய வம்சாவாளியை சேர்ந்த ரிஷி சுனக், அவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்டமையை இன்ஸ்டாகிராமில் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்திற்கு சென்ற பொழுது நிகழ்ந்துள்ளது.

இது குறித்து ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த மாதம் எனது சொந்த ஊரான சவுதாம்டனுக்கு சென்றிருந்தேன். ஆயினும் அது தொடர்பாக எனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை.

இதை அறிந்து அவர்கள் வருத்தமடைந்ததுடன் என்னை பார்க்க வர முயன்றனர் ஆயினும் அவர்களால் வர முடியவில்லை.

எனது அம்மா கொஞ்ச இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார். ஆனால் அப்போது தர முடியவில்லை. பின்னர் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்ற வேளை அதனை தந்தார்.

இதில் வினோதம் என்னவென்றால், அதன் பின்னர் நான் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். நானும், அவரும் பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு பசி எடுத்தது.

அதனால், நான் அவருக்கு என் அம்மாவின் பர்பியில் சிலவற்றைக் கொடுக்க அதைப் பார்த்து அம்மா சிலிர்த்து போனார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த காணொளி வைரலாகி வருகின்றது.

Recent News