Wednesday, April 2, 2025
HomeLatest Newsயாழ்ப்பாணத்தில் நடுரோட்டில் வீழ்ந்த ரைக்டானிக் ஹீரோ - வைரலாகும் புகைப்படம்(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் நடுரோட்டில் வீழ்ந்த ரைக்டானிக் ஹீரோ – வைரலாகும் புகைப்படம்(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் . – மானிப்பாய் – காரைநகர் வழித்தடத்தில் ,(782) சங்கானை மல்லாகம் சந்தியில் இருந்து சித்தன்கேணி வரையான (காப்பெட்) வீதி தவிர குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.ஒப்பந்த காரர்களால் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு தற்போது இவ் வீதி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.  மாணவர்கள்,பொது மக்கள், சந்தைக்கு உற்பத்திகளை கொண்டுவரும் விவசாயிகள் மற்றும் பிரதேச செயலகம், வைத்தியசாலை, வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வீதியூடாக வந்து செல்கின்றார்கள்.தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதி. அவசரமாக திருத்தப்பட வேண்டிய முக்கியமான பிரதான வீதி இது.
 
மழை பெய்ததால் வீதி இன்னும் சேதமடைந்து காணப்படுகிறது. வீதி விபத்துக்களும் நிகழக்கூடிய நிலை காணப்படுகின்றது. எனவே இவ் விடயத்தில் உரியவர்கள் கூடிய கவனமெடுத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்றவாறு செப்பனிட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என பொது மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற ரைற்டானிக்  திரைப்படக் காட்சிகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர்.வீதியில் காணப்படும் குழியில் ரைற்டானிக் ஹீரோ வீழ்ந்துள்ளார்.”ஜாக் எழுந்திரு ஜாக் ” என ஹீரோயின் கூப்பிடுவது போல குறித்த மீம்ஸ் காணப்படுகிறது.

பிற செய்திகள்

Recent News