Friday, January 24, 2025
HomeLatest News50 வயது நபருடன் காதலில் விழுந்த 24 வயது அழகி! காரணம் இதுமட்டும் தானாம்

50 வயது நபருடன் காதலில் விழுந்த 24 வயது அழகி! காரணம் இதுமட்டும் தானாம்

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

அவர் வெளியிட்ட காணொளியில் 50 வயது ஓட்டுனர் மீது 24 வயது பெண்ணுக்கு காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டதை கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், பேரூந்து ஓட்டுநராக இருப்பவர் சாதிக். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் சேஷாதி. பேரூந்து ஓட்டுனராக இருக்கும் சாதிக்கின் பேரூந்தில் சேஷாதி அடிக்கடி பயணித்து வந்துள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலும் மலர்ந்துள்ளது. சாதிக்கிற்கு 50 வயதாகும் நிலையில், சேஷாதிக்கு 24 வயது ஆவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

26 வயது இடைவெளியை அவர்கள் பெரிய அளவில் பொருட்படுத்தாமல், ஒருவருக்கு ஒருவர் காதலித்ததுடன் திருமணமும் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. சாதிக் பேரூந்தில் போடும் பழைய பாடல்கள் மற்றும், அவர் பேரூந்து ஓட்டும் அழகு, அவர் பேசும் ஸ்டைல் இவற்றினால் அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் கூறியுள்ளார்.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட காதலை சாதிக்கிடம் சேஷாதி தான் வெளிப்படுத்தியுள்ளாராம். தற்போது இந்த காதல் ஜோடி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News