Thursday, January 23, 2025
HomeLatest NewsX-Press pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மீள ஆராய்வு...!

X-Press pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மீள ஆராய்வு…!

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட சேதங்களை மீள கணக்கிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், சட்டத்தரணி அசேல ரெக்கவ தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் X-Press Pearl கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.

புதிய கணக்கீடுகளின் பின்னர் சேதங்களுக்கான முழு இழப்பீட்டு தொகையானது தற்போது மதிப்பிடப்பட்டுள்ள சுமார் 6.5 பில்லியன் டொலரை விடவும் மேலும் அதிகரிக்கலாமென கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Express Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இலங்கை அண்மையில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கு நாளை(15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Recent News