உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் பின்னணியில் நாட்டினுடைய பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சில முக்கிய தொழில்நுட்பங்களில் அமெரிக்காவில் இருந்து சீனாவில் செய்யபடுகின்ற முதலீடுகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அதோடு பிற தொழில்நுட்ப துறைகளிலும் முதலீடு செய்யவும் இனி அமெரிக்கா அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.