Saturday, January 11, 2025
HomeLatest Newsஐ.ஓ.சியிடம் 6,000 மெட்ரிக் தொன் டீசல் கொள்வனவு செய்ய தீர்மானம்!

ஐ.ஓ.சியிடம் 6,000 மெட்ரிக் தொன் டீசல் கொள்வனவு செய்ய தீர்மானம்!

லங்கா ஐ.ஓ.சியிடமிருந்து 6 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலைக் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு டீசல் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் டீசல் உடன் வருகை தரும் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் வரை குறித்த நடவடிக்கைகளுக்காக இந்த டீசல் தொகை கொள்வனவு செய்யப்படவுள்ளது.

Recent News