Thursday, January 23, 2025

ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பை முன்னேடுக்க தீர்மானம்

இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தலைமையிலான 7 நாடுகள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

மேலும் இலங்கைக்கு எதிராக பல நாடுகள் ஏற்கனவே கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு ஐக்கிய நாடுகளின் 77 ஆவது அமர்வு செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest Videos