Sunday, November 17, 2024
HomeLatest Newsகறுப்புக் கொடிகளுடன் ஹர்த்தால் அனுஷ்டிக்க தீர்மானம்!

கறுப்புக் கொடிகளுடன் ஹர்த்தால் அனுஷ்டிக்க தீர்மானம்!

எதிர்வரும் 6ஆம் திகதி தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரும் 6ஆம் திகதி எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தாலை நடத்தி ஊழல் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு இறுதிச் செய்தியை வழங்குவோம்.

6 ஆம் திகதிக்கு முன் புறப்பட வேண்டும். எனவே, இந்நாட்டு மக்களை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

கைகளை இணையுங்கள். பணிகள் நிறுத்தப்படும். போக்குவரத்து நிறுத்தப்படும். ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து தங்கள் அருகிலுள்ள வீதிக்கு கறுப்புக் கொடியைக் கொண்டு வர வேண்டும்.

வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள். நிறுவனங்களில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும். நாட்டு மக்களுடன் இணைந்து ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராக உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றலைக் காட்டுங்கள்.

ஹர்த்தாலை வெற்றியடையச் செய்யுங்கள். இந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமாகிய நாமும், இந்நாட்டிலுள்ள அனைத்து வெகுஜன அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இணைந்து தற்போது அல்லது 6ஆம் திகதிக்குள் தீர்மானிக்கவில்லை என்றால் எதிர்வரும் 11ஆம் திகதி ஹர்த்தாலை மீள ஆரம்பிப்போம்.

அரசாங்கம் வீட்டிற்கு செல்லும் வரை இது நிற்காது” என்றார். இதேவேளை எதிர்காலத்தில் முழுச் சுகாதார சேவையை உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Recent News