கோட்டாபய ராஜபக்ச மேலும் ‘புதிய புதிய தில்லுமுல்லு வேலைகளை புரியாமால்’ உடனடியாக பதவி விலக வேண்டும்.’
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
துரிதமாக தேர்தலுக்கு செல்லும் வரையில் உருவாக்கப்படுகின்ற இடைக்கால அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்திற்கு இணங்க எங்களது கட்சிக்கு வழங்கப்படுகின்ற பொறுப்பினை நிறைவேற்ற தாம் தயாராக உள்ளோம்.
நாட்டில் போராட்டக்காரர்கள் நம்பிக்கைகொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை முழுமையாக ஸ்தாபனப்படுத்தி உறுதிநிலையை ஏற்படுத்த முடிவது கிடைக்கின்ற மக்களது ஆணைக்கட்டளைக்கு ஏற்பவாகும்.
அதுவரையில் மக்களது பொது மற்றும் பிரதான சில பிரச்சினைகள் துரிதமாக தீர்க்கப்பட வேண்டும்.
இந்த மக்கள் போராட்டத்தின் உண்மையான நோக்கம் பாரிய ஆழமானது. அது முறையாக செய்யப்பட வேண்டும். அதன்படி எதிர்வரும் முடிவுகளை துரிதமாக தாம் அறிவிப்போம்.
முதலில் கோட்டாபய ராஜபக்ச மேலும் ‘புதிய புதிய தில்லுமுல்லு வேலைகளை புரியாமால்’ உடனடியாக பதவி விலக வேண்டும்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பல்வேறு வாதிப் பிரதிவாதங்களை முன்னெடுத்து அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள முயலாது அவரும் தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.
குறிப்பாக நாட்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படக்கூடிய நிறைய காரணங்கள் போராட்டத்தில் காணப்படுகின்றன.
அவற்றை நிறைவேற்றுவதற்காக தமது அரசியல் இயக்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று உறுதி வழங்குகிறேன்.
அதுதொடர்பிலான அடுத்த முடிவுகளை விரைவில் அறியத்தருகிறோம். இதுபற்றி குழப்பமடையத் தேவையில்லை.
இந்த வெற்றியை நிலையான வெற்றியாக பரிமாற்றம் செய்துகொள்வற்காக போராட்டத்தின் உட்பொருளை விளங்கிக்கொள்ள வேண்டும்.
கோட்டாபய – ரணில் ஆகியோரை விரட்டியடிப்பதால் மாத்திரம் அதனை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.