சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஆழ்கடலில் தத்தளித்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
55 பேர் அந்தக் கப்பலில் இருந்ததாகவும் குறித்த கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் கடற்படையினருக்கு அறிவித்ததையடுத்து, கடற்படையின் பராக்கிரமபாகு கப்பல் நேற்று அந்த இடத்தை சென்றடைந்தது.
அந்த நேரத்தில் நாட்டின் தென்கிழக்கே 722 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சூறாவளியால் தாக்கப்பட்டு நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்ததாகவும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் பலர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட குழுவில் மூன்று பெண்கள் ஆறு குழந்தைகள் மற்றும் இந்த சட்டவிரோத பயணத்தை வழிநடத்திய ஐந்து பேர் அடங்குவர் என கெட்படை குறிப்பிட்டுள்ளது.