Tuesday, December 24, 2024
HomeLatest Newsமருந்து கொள்வனவுக்கு உதவுமாறு உலக வங்கியிடம் கோரிக்கை!!!

மருந்து கொள்வனவுக்கு உதவுமாறு உலக வங்கியிடம் கோரிக்கை!!!

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதிப் பொருட்களை துறைமுகங்களில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நாட்டிற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உதவுமாறு ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் லினே சர்பன் பென்ஸ் உள்ளிட்ட விசேடபிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News