Friday, November 15, 2024
HomeLatest Newsகுரங்கு அம்மை நோய்க்கு மாற்று பெயரை பரிந்துரைக்க கோரிக்கை -உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை!

குரங்கு அம்மை நோய்க்கு மாற்று பெயரை பரிந்துரைக்க கோரிக்கை -உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை!

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயரை பரிந்துரைக்கும் படி உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது .

ஆபிரிக்காவில் கண்ட றியப்பட்ட குரங்கு அம்மை ( மங்கிபாக்ஸ் ) நோயால் உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயின் தீவிரத்தையடுத்து உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது .

இந்நிலையில் , குரங்கு அம்மை நோயின் பெயர் இனவெறியைத் தூண்டுவதாகவும் , பாரபட்சமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வந்ததால் வைரஸ் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்த்து ரோமன் நம்பர்களை பயன்படுத்தி பெயர் சூட்ட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது .

அதன்படி , குரங்கு அம்மை நோய் மற்றும் வைரஸ் பெயர்களுக்கு பொது மக்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன .

மேலும் , மாறுபாடு கொண்ட குரங்கு அம் மைகளுக்கு ( varaint Names ) பிராந்திய அடிப்படையிலான பெயர்களுக்குப் பதிலாக , புதிய பெயரை சூட்ட முடிவுசெய்யப் பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் , மத்திய ஆபிரிக்காவின் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1 என்றும் , மேற்கு ஆபிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 2 எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது .

Recent News