Friday, January 17, 2025
HomeLatest Newsகொழும்பு இளையோர் பெளத்த சங்கம் பிரதமரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

கொழும்பு இளையோர் பெளத்த சங்கம் பிரதமரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என கொழும்பு இளையோர் பெளத்த சங்கம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், அவர்களுக்கு உதவிய மற்றும் உறுதுணையாக இருந்த அரசியல் சக்திகளும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு இளையோர் பெளத்த சங்கத்தின் தலைவர்,

எத்தகைய மாற்றத்தையும் எதிர்கொண்டு ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை புதிய பிரதமர் செய்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

Recent News