Friday, November 22, 2024
HomeLatest Newsரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை

இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த இருவரும் இன்று காலை பஹ்ரைனில் இருந்து Gulf Air விமானமான GF-144 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான சர்வதேச நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை காரணமாகவே, இந்த பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக கட்டுநாயக்க விமானநிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.

குறித்த இருவரையும் வரவேற்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கையினை வந்தடைந்துள்ள ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவரும், இங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Recent News