Thursday, January 23, 2025
HomeLatest Newsரெண்ட் எ டாட்…!குஷியில் அம்மாக்கள்..!அறிமுகமாகியுள்ள புதிய சேவை..!

ரெண்ட் எ டாட்…!குஷியில் அம்மாக்கள்..!அறிமுகமாகியுள்ள புதிய சேவை..!

ஆண் குழந்தைகளுடன் செல்லும் அம்மாக்களிற்காக வாடகை அப்பா என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையானது சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லியோனிங் மாகாணத்தில் இருக்கும் குளியல் இல்லதிலே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஆண் குழந்தைகளுடன் அந்த குளியல் இல்லத்திற்கு வரும் அம்மாக்களுக்கு உதவும் வகையிலே இந்த ரெண்ட் எ டாட் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த குளியல் இல்லத்தின் உரிமையாளர், குளியல் இல்லத்திற்கு வரும் அம்மாக்கள் தமது ஆண் குழந்தைகளை இந்த வாடகை அப்பாக்களிடம் விட்டுவிட்டு தாம் சுதந்திரமாக எவ்வளவு நேரம் என்றாலும் நீச்சல் குளத்தில் குளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களின் குழந்தையை பார்த்துக் கொள்ளும் வாடகை அப்பா, ஆண்கள் குளிக்கும் நீச்சல் குள பிரிவிற்கு அழைத்து சென்று அவரது மகனைப் போன்று குளிப்பாட்டி பராமரித்து கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், இந்த சேவைக்கு குறித்த குளியல் இல்லத்தில் இதுவரை எந்த கட்டணமும் வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News