Saturday, January 11, 2025
HomeLatest NewsG20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்குங்கள்: அமெரிக்கா கோரிக்கை.

G20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்குங்கள்: அமெரிக்கா கோரிக்கை.

G20 நாடுகளின் பிரதான பொருளாதார கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவின் பெயரை நீக்கி விடுமாறு அமெரிக்க அதிபர் பைடன் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பொருளாதார செயலாளார் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.

தற்போது உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு பாரிய பிரச்சனையாக G20 கூட்டமைப்பில் காணப்படுவதாகவும் மேற்படி அமைப்பில் ரஷ்யா அங்கம் வகிப்பதால் ரஷ்யாவை நீங்கி விட்டு பக்க சார்பில்லாத முறையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் கோரிக்கையை தாம் ஏற்பதாகவும் ஆனால் உலக எண்ணெய் பொருளாதார ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற ரஷ்யாவை நீக்கம் செய்தால் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி தடைசெய்யப்படும் எனவும் இதனால் பொருளாதார வீழ்ச்சி மேலும் ஏற்படும் எனவும் கவலை தெரிவித்த ஜேனட் யெலன் இந்த வருடம்  ரஷ்யாவினால் சமர்ப்பிக்கப்பட விருக்கின்ற பொருளாதார அறிக்கையினை எதிர்பார்த்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து மேற்படி முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.

Recent News