Thursday, January 16, 2025
HomeLatest Newsஏரோஃப்ளோட் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஏரோஃப்ளோட் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானம், நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டது.

குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் நேற்று ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

Recent News