Thursday, November 14, 2024
HomeLatest Newsஇலங்கை மக்களுக்கு மின் கட்டணத்திற்கு நிவாரணம் - ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை மக்களுக்கு மின் கட்டணத்திற்கு நிவாரணம் – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மீண்டும் மின் கட்டணங்களைத் திருத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இது தொடர்பில் பணிப்புரை விடுத்துள்ளார்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். 

புனித தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் சூரிய ஒளி மின் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாற்று எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்காக பன்னிரண்டு மாத காலத்துக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை நாற்பது பில்லியன் ரூபாவாகும். அத்தொகையை செலுத்துவதற்காக அரச வங்கியொன்றில் ஐம்பது பில்லியன் ரூபாவை கடனாகப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 15 முதல், மின்சாரக் கட்டணம் அறுபத்தி ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டது. மார்ச் மாதம் முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து புதிய மின் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News