தாய்வானை சீனாவுடன் இணைப்பதற்கு அமைதியான முறையில் அனைத்து முயற்சிகளையும் சீனா மேற்கொள்ளும் எனவும், எவ்வாறாயினும் இவை அனைத்தும் செயல்படாத பட்சத்தில் பலம் பிரயோகிப்பது சீனாவின் முடிவாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி ஊடகத் தொடர்பாளர் சன் எலி ஊடகங்களுக்கு வழங்கியிருந்த தகவலின் போது, சீனா, தாய்வான் இரண்டும் இணைவது இரண்டு நாட்டு மக்களதும் விருப்பமாக உள்ளது.
எனவே இதை அமைதியான முறையில் செய்வதற்கு சீனா அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
எவ்வாறாயினும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் தாய்வான் ராணுவம் மற்றும் அரசாங்கம் இந்த முயற்சிக்கு எதிர்த்து தாய்வானின் சுதந்திரம் எனும் கருத்திற்கு இயங்க முற்பட்டால் சீனா பலப் பிரயோகத்தின் மூலம் தாய்வானை தன்னுடன் இணைக்கும் என கூறியுள்ளார்.
இதன்போது குறிப்பாக அமெரிக்கா மீண்டும் மீண்டும் தாய்வானிற்கு உதவி செய்து வருவதையும் சீனாவிற்கு எதிராக தாய்வானிற்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.