மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி, பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை முயற்சிக்கும் வேளையில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க முன்னாள் ஜனாதிபதியும் மாலைதீவு நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் நியமிக்கப்பட்டதை மாலைதீவு ஜனாதிபதி வரவேற்றார்.
“மாலைதீவு எப்போதும் இலங்கையர்களுடன் நிற்கும் மற்றும் இந்த இக்கட்டான காலங்களை கடக்க அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவளிக்கும்” என்று ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நஷீத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நஷீத் தாராளமாக இலங்கைக்கு வெளிநாட்டு நாடுகளிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கு உதவ முன்வந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அவரை நியமித்தார்.
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு முன்னாள் ஜனாதிபதி நஷீட் நன்றி தெரிவித்தார்.