சட்டவிரோதமான முறையில் 607.5 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் அதற்கான அபராதத் தொகையை திறைசேரிக்கு செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த அபராதத் தொகையான 160 மில்லியன் ரூபாவை திட்டமிட்டபடி நிறுவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 9ஆம் திகதி தடைசெய்யப்பட்ட சிவப்பு சீனியை வெள்ளைச் சீனி என்று கூறி இறக்குமதி செய்த போது சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.