Tuesday, December 24, 2024
HomeLatest Newsவரலாறு படைத்த மெஸ்ஸியின் பதிவு! ஸ்தம்பித்துப் போன இன்ஸ்டாகிராம்

வரலாறு படைத்த மெஸ்ஸியின் பதிவு! ஸ்தம்பித்துப் போன இன்ஸ்டாகிராம்

உலகக் கோப்பை வெற்றியை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி வெளியிட்ட பதிவு ஒன்று இதுவரை அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக மாறியுள்ளது.

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர், கடந்த மாதம் கத்தாரில் ஆரம்பமாகி இருந்தது.36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை ஆர்ஜென்டினா வென்றது உலகளவில் பேசுபொருளாக உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, ஆர்ஜென்டினா அணி 3 ஆவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், ஆர்ஜென்டினா கால்பந்து உலகக்கோப்பையை வென்றது தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது. மேலும், மெஸ்ஸியை தற்போது வரை ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சாம்பியன் பட்டத்தை வென்றதும் இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களை கொண்டாடி வருகிறது.

தற்போது அதுவே இன்ஸ்டாகிராமில் இதுவரை உலகில் அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவாக மாறியுள்ளது. இது மொத்தமாக 62 மில்லியன் (6.2 கோடி) லைக்குகள் பெற்றுள்ளது. 1.7 மில்லியன் (17 லட்சம்) பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனம் மற்றும் தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் பகிர்ந்துள்ள விடயம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில், அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “லியோனல் மெஸ்ஸியின் உலக கோப்பை பதிவு இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிக லைக்குகளை பெற்ற பதிவாக மாறியுள்ளது.

இறுதி போட்டியின் போது, வாட்ஸ்அப்பிலும் ஒரு நொடிக்கு 25 மில்லியன் குறுஞ்செய்திகள் வீதம் பெறப்பட்டு சாதனை புரிந்துள்ளது” என மார்க் ஸக்கர்பெக் குறிப்பிட்டார்.

Recent News